கடவுளின் படத்தை காண்பித்து ஏழை வயிற்றை நிரப்ப முடியாது: மல்லிகார்ஜூன கார்கே தாக்கு

ஐதராபாத்: கடவுள் படத்தை காண்பித்து ஏழைகளின் வயிற்றை நிரப்ப முடியாது என்றும் மோடி பற்றி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார். தெலங்கானா மாநிலம்,ஐதராபாத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு மல்லிகார்ஜூன கார்கே நேற்று பேசுகையில்,‘‘ கடந்த 22ம் தேதி பிரதமர் மோடி முன்னிலையில் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

கடவுள்களின் படத்தை காண்பிப்பதனால் ஏழைகளின் வயிற்றை நிரப்ப முடியாது. நாட்டில் பணவீக்கம் தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது. மக்கள் பலர் வேலை இல்லாமல் உள்ளனர். நெருக்கடிகள் ஏற்படும் போது பாகிஸ்தான்,சீனா மற்றும் கடவுள்களின் பெயர்கள் உள்பட பல சாக்குபோக்குகளை மோடி சொல்வார். இதற்கு முன் பல உத்தரவாதங்களை அளித்துள்ள மோடி இதுவரை நிறைவேற்றவில்லை. எனவே மோடியின் வலையில் யாரும் விழுந்து விடாதீர்கள்’’ என்றார்.

 

Related posts

மோடி, அமித்ஷா கட்டளைப்படி விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணித்த எடப்பாடி: மாணிக்கம்தாகூர் எம்பி குற்றச்சாட்டு

பணியிட மாறுதல் செய்யப்பட்டதால் அதிகளவு மாத்திரைகள் சாப்பிட்டு சார்பதிவாளர் தற்கொலை முயற்சி

மின்னணு வாக்கு எந்திரங்களின் பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்: ராகுல் காந்தி