பூந்தமல்லியில் கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்த வடமாநில தொழிலாளர்கள் கைது

பூந்தமல்லி: வடபழனியில் இருந்து பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் 2ம் கட்டப் பணிகள் நடந்து வருகிறது. இதில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பூந்தமல்லியில் நடந்து வரும் பணிகளில் அசாம் மாநிலத்தை சேர்ந்த அனுருல்லாஹ் (33), முஜிபுர் ரஹ்மான் (44) ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களிடம் போதைப் பொருள் இருப்பதாக பூந்தமல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இவர்கள் பூந்தமல்லி பஸ் நிலையம் அருகே பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம் சோதனை நடத்தி ரூ.30,000 மதிப்புள்ள மெஸ்கலைன் என்ற போதை பவுடரை பறிமுதல் செய்தனர்.

பின்னர் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இந்த போதை பொருளை எரிக்கும்போது வரும் புகையை சுவாசிப்பதால் போதை ஏற்படும் என்றும், இந்த பவுடரை திரவமாக்கி ஊசி மூலம் செலுத்துவதாலும் போதை ஏற்படும் என்று கூறப்படுகிறது. இருவரும் வட மாநிலங்களில் இருந்து போதை பொருளை கடத்தி வந்து இங்குள்ள வட மாநில தொழிலாளர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related posts

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு

நீட் தேர்வு முறைகேடு: மேலும் 9 மாணவர்களுக்கு நோட்டீஸ்

ஜப்பானில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது ஜூன் 2 முதல் பாதிப்பு அதிகரிப்பு