பொன்முடி வழக்கு: உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு

புதுடெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக கூறப்படும் விவகாரத்தில் எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவரும் குற்றவாளி என உத்தரவிட்டு, விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்தார். மேலும் இருவருக்கும் மூன்ற ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருந்தார்.

இதையடுத்து சரணடைவதில் இருந்து விலக்கு கேட்டு பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோர் தாக்க செய்திருந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை நான்கு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்றும், அதுவரையில் அதுவரையில் பொன்முடி அவரது மனைவி சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்றும் கடந்த ஜனவரி 30ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபாய்.எஸ்.ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், இந்த இடைப்பட்ட காலத்தில் வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதுவரையில் தற்போது உள்ள நிலையே தொடரும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related posts

கேரளாவில் நேற்று பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு

ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை ரத்து