நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!

சென்னை: சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் சுமார் 10 வாகனங்களில் சென்ற அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் சென்னையில் இன்று 5 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்தது தொடர்பான வழக்கில் சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் புஷ்பா நகரில் உள்ள முபாரக் உசைன் என்பவர் வீட்டிலும், நுங்கம்பாக்கத்தில் மற்றொரு பகுதியில் தர்ஷன் குமார் என்பவருக்கு சொந்தமான இடங்களிலும் மேலும் குமரன் நகர் பகுதியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு இடங்களிலும் 5 முதல் 6 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனைக்குட்பட்ட இடங்களில் உள்ளவர்களின் வங்கி கணக்கு பணப்பரிமாற்றம் எந்த அளவிற்கு நடைபெற்று கொண்டிருக்கிறது என்பது தொடர்பாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஐதராபாத்தை அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி!

கருவின் பாலினம் அறிவது, அறிவிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழ்நாடு அரசு

பாவூர்சத்திரத்தில் நடுவழியில் பஞ்சராகி நின்ற ஒன் டூ ஒன் அரசு பஸ்: பயணிகள் அவதி