சட்டீஸ்கரில் 10 போலீசார் பலி 2 மாதங்கள் திட்டமிட்டு நக்சலைட்கள் தாக்குதல்: விசாரணையில் திடுக் தகவல்

தண்டேவாடா: சட்டீஸ்கரில் 10 போலீசாரை பலி வாங்கிய பயங்கர தாக்குதலை நக்சலைட்கள் 2 மாதங்கள் திட்டமிட்டு நடத்தியிருப்பதாக விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. சட்டீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் கடந்த 26ம் தேதி நக்சலைட்கள் மண்ணில் புதைத்து வைத்திருந்த ஐஇடி வகை வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். இதில், நக்சல் ஒழிப்பு படைப்பிரிவான மாநில ரிசர்வ் காவல் படையை சேர்ந்த 10 போலீசாரும், வேன் டிரைவரும் உடல் சிதறி இறந்தனர். குண்டுவெடித்த இடத்தில் 10 அடி ஆழமான பள்ளம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், 2 மாதங்களாக நக்சலைட்கள் திட்டமிட்டு இத்தாக்குதலை நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது. சாலையில் பள்ளம் தோண்டி 40 அல்லது 50 கிலோ ஐஇடி வெடிகுண்டை புதைத்துள்ளனர். அதை இணைக்கும் 150 அடி நீள ஒயர்களையும் மண்ணில் 2, 3 அங்குல ஆழத்தில் பள்ளம் தோண்டி புதைத்துள்ளனர். இதனால், அந்த சாலையில் அவ்வப்போது கண்ணிவெடி சோதனை நடத்தப்பட்ட போதிலும், இந்த வெடிகுண்டு சிக்கவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை நடத்தியதாக சில நக்சலைட்கள் மீது போலீசார் சந்தேகித்துள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

Related posts

மோசமான வானிலையால் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் சென்ற ஹெலிகாப்டர் அரைமணி நேரம் வானில் வட்டமடித்தது!!

கோயில் திருவிழாவில் சாதி பாகுபாடு; நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம்: விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு!

வந்தாச்சு மாம்பழ சீசன்!