பொக்லைன் ஆப்ரேட்டர் போக்சோவில் கைது

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு அருகே பாலூர் அடுத்த வில்லியம்பாக்கம் இருளர் காலனி பகுதியை சேர்ந்த 7ம் வகுப்பு படித்து வரும் 13 வயதுள்ள சிறுமி. இவருக்கு கண் குறைபாடு உள்ளது. இதனால், அந்த சிறுமியின் பெற்றறோர் கண் மருத்துவனையில் சிகிச்சை பெறுவதற்காக, மறைமலைநகர் அடுத்த சட்டமங்கலத்தில் உள்ள தனது உறவினர் சங்கர் என்பவரின் வீட்டில், கடந்த வாரம் சென்று அந்த சிறுமியை விட்டுவிட்டு வந்தனர்.

இந்நிலையில், சங்கரின் மகன் விஜி (எ) விஜயகுமார் (26). பொக்லைன் ஆப்ரேட்டரான இவருக்கு, ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர், தனது வீட்டிலிருந்த உறவினரின் மகளை கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி, கடந்த புதன்கிழமை காலை சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை.

இதனால், மாணவியின் பெற்றோர், பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, வியாழக்கிழமை காலை இருவரும் வீடு திரும்பினர். அப்போது மாணவியிடம் அவரது பெற்றோர் விசாரித்தனர். அப்போது, சட்டமங்கலம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் ஒருநாள் முழுவதும் வைத்து, விஜி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்து பொக்லைன் ஆப்ரேட்டர் விஜியை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு