நாடாளுமன்ற கேன்டீனில் எம்பி.க்களுடன் மதிய உணவு சாப்பிட்ட பிரதமர் மோடி

புதுடெல்லி: நாடாளுமன்ற கேன்டீனில் பிரதமர் மோடி எம்பி.க்களுடன் நேற்று மதிய உணவு சாப்பிட்டார். ஒன்றிய பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 31ம் தேதி தொடங்கியது. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின் கடைசி பட்ஜெட் கூட்டத் தொடர் இது.
ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 1ம் தேதி தாக்கல் செய்தார். முந்தைய ஐமு கூட்டணி ஆட்சி காலத்தில் இருந்த பொருளாதாரம் தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் மக்களவையில் தாக்கல் செய்தார். இது தொடர்பாக நடந்த விவாதத்துக்கு நிர்மலா சீதாராமன் நேற்று பதிலளித்தார்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் உள்ள கேன்டீனில் நேற்று பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்பி.க்களுடன் பிரதமர் மோடி மதிய உணவு சாப்பிட்டார். பிரதமர் மோடியின் அருகே அமர்ந்து ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பிஜேடி கட்சியை சேர்ந்த சாஸ்மித் பத்ரா,ஆர்எஸ்பி கட்சியின் பிரேமச்சந்திரன்,ராம் மோகன் நாயுடு(தெலுங்குதேசம்), ரித்தேஷ் பாண்டே(பகுஜன் சமாஜ்),ஹீனா காவிட்(பாஜ) உணவு உண்டனர்.பட்ஜெட் கூட்ட தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.

Related posts

அறிவை வளர்த்தோம்… தன்னம்பிக்கை பெற்றோம்… லண்டனில் பயிற்சி முடித்து திரும்பிய மாணவர்கள் முதல்வருடன் உற்சாகமாக கலந்துரையாடல்

அதிக கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை: மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி