ஆருத்ரா இயக்குநருக்கு மேலும் 5 நாள் காவல் கோரி மனு

சென்னை: ஆருத்ரா நிறுவன இயக்குநர் தீபக் பிரசாத்தை மேலும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் மனு தாக்கல் செய்தனர். ஏற்கனவே 5 நாள் காவல் முடிந்த நிலையில் மேலும் 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் போலீஸ் மனு தாக்கல் செய்தது. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்தனர். அதிக வட்டி தருவதாக பொதுமக்களிடம் ரூ.2,500 கோடி மோசடி செய்த வழக்கில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்

ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்த விவகாரம் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் விசாரணைக்கு ஆஜராகவில்லை: 4ம் தேதிக்கு பிறகு ஆஜராக போவதாக தகவல்

உபரியாக பணிபுரிந்து வந்த ஆசிரியர்களுக்கான பணி நிரவல் 244 பணியிடங்களுக்கு முறையான ஆசிரியர்கள் நியமனம்: பள்ளிக்கல்வித்துறை தகவல்