“பெரம்பலூர் தொகுதியில் நான் வெற்றி பெற்றால் மேலும் 1,200 மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி”: பாரிவேந்தர் எம்.பி. பேட்டி

சென்னை: பெரம்பலூர் தொகுதியில் நான் வெற்றி பெற்றால் மேலும் 1,200 மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி வழங்குவேன் என பாரிவேந்தர் எம்.பி. தெரிவித்துள்ளார். பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தர் எம்.பி. துறையூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,

மக்கள் ஆதரவு நம்பிக்கை தருகிறது:

தேர்தல் பரப்புரையில் கூட்டணி கட்சியினர் நல்ல ஒத்துழைப்பு அளித்தனர். இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையை தோழமை கட்சியினர் தந்துள்ளனர். பரப்புரையின்போது மக்கள் ஆதரவு தந்தது இந்த தேர்தலில் வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கையை தருகிறது. நாட்டிற்கு குடும்ப ஆட்சி வேண்டுமா (அ) ஜனநாயக ஆட்சி வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். ஊழல் வேண்டுமா? வேண்டாமா? என்பதை தீர்மானிக்கும் தேர்தல் இது. ஊழலை குத்தகைக்கு எடுத்துள்ளவரே என்னை எதிர்த்து போட்டியிடுகிறார் என பாரிவேந்தர் தெரிவித்தார்.

மக்களுக்கு சேவை செய்யவே அரசியலுக்கு வந்தேன்: பாரிவேந்தர்

பணம் சம்பாதிக்க நான் அரசியலுக்கு வரவில்லை; மக்களுக்கு சேவை செய்யவே வந்துள்ளேன் என பாரிவேந்தர் எம்.பி. தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியின்படி 1,200 மாணவர்களுக்கு ரூ.118 கோடி செலவு செய்து இலவச கல்வியை அளித்துள்ளேன். மக்களின் பேராதரவில் வரும் தேர்தலில் பெரம்பலூரில் நிச்சயம் வெற்றுபெறுவேன் என்றார்.

1,200 மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி:

பெரம்பலூர் தொகுதியில் நான் வெற்றி பெற்றால் மேலும் 1,200 மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி வழங்குவேன். 1,500 ஏழை குடும்பங்களைச் சேர்ந்தோருக்கு தலா 10 லட்சம் அளவிலான மருத்துவ செலவை ஏற்பேன் என பாரிவேந்தர் உறுதி அளித்தார். இஸ்லாமியர், கிறிஸ்தவர்களை சிறுபான்மையினர் என்று கூறி பிரித்து வைத்துள்ளனர். இஸ்லாமியர், கிறிஸ்தவர் ஆகிய அனைவரும் இந்திய நாட்டின் பிரஜைகள்; எனது சகோதரர்கள் என பாரிவேந்தர் செய்தியாளர்களிடம் கூறினார்.

Related posts

ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை புல்டோசரை வைத்து இடிப்பார்கள்: காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

குமரியை சேர்ந்த தமிழக பாஜ மாநில நிர்வாகி 1200 கோடி சுருட்டினாரா?.. பரபரப்பாகும் ஆடியோ வைரல்

சேதமாகி கிடக்கும் சாலை பார்வதிபுரம் மேம்பாலத்தில் பராமரிப்பு பணி செய்யப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு