அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது: ஜெயக்குமார் விமர்சனம்

சென்னை: அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். குறைவான அளவே வாக்குகள் பதிவானது தொடர்பாக ஜெயக்குமார் விமர்சனம் செய்தார். பிரதமர் மோடியின் பேச்சுக்கு அதிமுக கண்டனம் தெரிவிப்பதாகவும் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக எடப்பாடி வெளியிட்ட அறிக்கையில் கண்டனம் என்ற வார்த்தை இல்லாதது குறித்து ஜெயக்குமார் விளக்கம் அளித்தார். கண்டனம் என்ற வார்த்தை கூட இல்லாமல் பழனிசாமி அறிக்கை வெளியிட்டது குறித்து சன் நியூஸில் செய்தி வெளியானது. பிரதமர் மோடி பேச்சு குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டது கண்டன அறிக்கைதான் என்று ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

Related posts

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படும்: வானிலை மையம் எச்சரிக்கை

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு