போதை மாத்திரை விற்ற 4 பேர் பிடிபட்டனர்

வேளச்சேரி: பெரும்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் எழில் நகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்ற சரித்திர பதிவேடு குற்றவாளி ஆனந்தன் (30) என்பவரை பிடித்து அவரது பையை சோதனை செய்தனர். அதில் ஏராளமான போதை மாத்திரைகள் இருந்தன. அவர் கொடுத்த தகவலின்பேரில், அதேபகுதி பிளாக் 112ஐ சேர்ந்த சாரதி என்கிற சரோவை (21) பிடித்தனர்.

இதையடுத்து ராமமூர்த்தி அவென்யூ, ராமச்சந்திரா நகர், பாரதி தெருவை சேர்ந்த நாகராஜ் (21), லோகேஷ் (21) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 2000 போதை மாத்திரைகள் மற்றும் ரூ.59 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், பெரும்பாக்கம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆனந்தன் மீது ஆதம்பாக்கத்தில் ஒரு கொலை, பல காவல் நிலையங்களில் 11க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.

Related posts

ஜப்பானில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது ஜூன் 2 முதல் பாதிப்பு அதிகரிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது மேலிடத்தின் உத்தரவு: ப.சிதம்பரம் விமர்சனம்

டி20 உலகக்கோப்பை லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து