மாநெல்லூர் ஊராட்சியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது: 1.2 கிலோ கஞ்சா பறிமுதல்

கும்மிடிப்பூண்டி: மாநெல்லூர் ஊராட்சியில், கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த மாநெல்லூர் ஊராட்சியில் கஞ்சா விற்கப்படுவதாக பாதிரிவேடு போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் போலீசார் மாநெல்லூர், குந்தாணிமேடு, பல்லவாடா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். அப்போது மாநெல்லூர் சுடுகாட்டுப் பகுதியில், சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த மூன்று பேரை மடக்கி, பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அதில், அவர்கள் செதில்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மானேஷ்(21), ஆந்திரா மாநிலம் சத்தியவேடு பகுதியைச் சேர்ந்த எத்திராஜ்(22) மாநெல்லூரை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து, மானேஷ், எத்திராஜை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

Related posts

சென்னையில் தனக்குத் தானே பிரசவம் பார்த்தபோது, குழந்தையை வெட்டிக் கொன்ற செவிலியர் சிறையில் அடைப்பு!

ஜெயக்குமார் மரணத்தில் நிறைய சந்தேகங்கள் உள்ளன: நெல்லையில் காங். தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி!

மே 5-ம் தேதி வணிகர்கள் தினம்; செங்கல்பட்டில் கடைகள் அடைப்பு!