திருத்தணியில் பீகாக் மருத்துவமனை 7ம் ஆண்டு விழா

திருத்தணி: திருத்தணியில், பீகாக் மருத்துவமனை 7ம் ஆண்டு விழா நடைபெற்றது. திருத்தணி-அரக்கோணம் சாலையில் உள்ள பீகாக் மருத்துவமனையில் குடல், இதயம் சம்பந்தமான நோய்களுக்கு சிகிச்சை உள்பட பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட இந்த மருத்துவமனை 7ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையடுத்து, ஆண்டுவிழா பீகாக் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் கிரண் தலைமையில் நடைபெற்றது. மகப்பேறு சிறப்பு மருத்துவர் அனுபாமா கிரண், மருத்துவமனை செயலாளர் சங்கரநாராயணன் முன்னிலை வகித்தனர். மக்கள் தொடர்பு அலுவலர் ரகு வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக ஸ்டான்லி மருத்துவமனை முன்னாள் பேராசிரியர் டாக்டர் ரகுராமன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

இதில் சென்னையை சேர்ந்த ரித்தீஷ் கலந்துகொண்டு மேஜிக் ஷோ நிகழ்ச்சி நடத்தினார். இதையடுத்து செவிலியர்கள், மக்கள் தொடர்பு அலுவலர்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு ‘‘மதுவால் ஏற்படும் தீமைகள்’’ குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினர். மருத்துவமனையில் தொடக்க காலத்தில் இருந்து பணிபுரிந்துவரும் ஊழியர்களை பாராட்டி தங்க காயின் மற்றும் வெள்ளி காயின் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், எலும்பு முறிவு சிறப்பு மருத்துவர் அனில், இதயம் சம்பந்தமான மருத்துவர் பாஷா, குழந்தைகள் நல மருத்துவர் ஹேமச்சந்திரன், டாக்டர் வருண் காயத்ரி தேவி, நர்சிங் சூபர்வைசர் நிர்மலா தேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மருத்துவமனை தலைமை அலுவலர் மூர்த்தி நன்றி கூறினார்.

Related posts

எடியூரப்பா மீது போக்சோ வழக்கில் புகாரளித்த பெண் மருத்துவமனையில் உயிரிழப்பு!

தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் அளிக்கும் படிப்புச் சான்று வேலைவாய்ப்புக்கு செல்லாது என்ற அரசாணைக்கு தடை

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களால் நடத்தப்படும் மாணவர் விடுதிகள் உரிமம் பெற வேண்டும்: மதுரை ஆட்சியர்