விதிமுறைகளை மீறியதாக பே டிஎம் வங்கிக்கு ரூ.5.39 கோடி அபராதம்

மும்பை: பே டிஎம் பேமண்ட் வங்கிக்கு ரிசர்வ் வங்கி ரூ.5.39 கோடி அபராதம் விதித்துள்ளது. பேமெண்ட் வங்கிகளுக்கு உரிமம் வழங்குவதற்கான ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்கள், சில விதிகளை பே டிஎம் பேமண்ட் வங்கி மீறியுள்ளதாக ரிசர்வ் வங்கி கண்டறிந்தது. பின்னர் வங்கி செயல்பாடுகள் குறித்து தணிக்கை செய்தபோது, பே டிஎம் பேமெண்ட் வங்கி பரிவர்த்தனை சேவைகளை வழங்குவதற்காக இணைக்கப்பட்ட நிறுவனங்கள் குறித்தும், பரிவர்த்தனைகள் குறித்தும் கண்காணிக்க வங்கி தவறி விட்டது என்பதும் தெரிய வந்தது.இதற்காக வங்கிக்கு ரூ.5.39 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு