பயணிகள் வாகன விற்பனை 12 % அதிகரிப்பு

கடந்த பிப்ரவரி மாதத்துக்கான வாகன விற்பனை விவரங்களை ஆட்டோமொபைல்டீலர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி பயணிகள் வாகன விற்பனை கடந்த பிப்ரவரியில் 12 அதிகரித்து 3,30,107 ஆக உள்ளது .இது முந்தைய ஆண்டு இதே மாதத்தில் 2,93,803 ஆக இருந்தது. இது பிப்ரவரி மாதத்தில் விற்பனையான அதிகபட்ச அளவாகும் என இந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுபோல் மொத்த விற்பனையிலும், பயணிகள் வாகன விற்பனை 3,73,177 வாகனங்களாக உள்ளது. இது முந்தைய ஆண்டு இதே மாதத்தில் 3,35,324 ஆக இருந்தது. ஒட்டு மொத்த அளவில் வாகன விற்பனை கடந்த மாதம் 13.07 சதவீதம் அதிகரித்து 20,29,541 ஆக உள்ளது. டூவீலர்கள் விற்பனை 13.25 சதவீதம் உயர்ந்து 14,39,523 ஆகவும், வணிக பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை 5 சதவீதம் உயர்ந்து 88,367 ஆகவும் உள்ளது. மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை அதிகபட்சமாக 24 சதவீதம் அதிகரித்து 94,918 ஆக உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 76,626 டிராக்டர்கள் விற்பனை ஆகியுள்ளன. முந்தைய ஆண்டு இதே மாதம் 69,034 டிராக்டர்கள் விற்பனையாகின. இத்துடன் ஒப்பிடுகையில் விற்பனை 11 சதவீதம் உயர்ந்துள்ளது என, ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

Related posts

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் தொடங்கியது!!

தாய்ப்பால் விற்பனை.. 18 குழுக்கள் அமைத்து மாநிலம் முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: உணவு பாதுகாப்புத்துறை தகவல்

நாட்டரசன்கோட்டை ரயில் நிலையத்திற்கு கிடைக்குமா ‘கிரீன் சிக்னல்’: பொதுமக்கள் எதிர்பார்ப்பு