கள்ளச்சாராயம் விற்ற ஊராட்சி தலைவி கைது

வேப்பூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் சிறுபாக்கம் அடுத்த வடபாதி கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருபவர் கற்பகம் (27). இவரது கணவர் மணிவேல், கள்ளச்சாராயம் விற்றதாக கடந்த சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டு, தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஊராட்சி மன்ற தலைவி கற்பகம், தனது வீட்டில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக சிறுபாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

போலீசார் நேற்று ஊராட்சி தலைவி கற்பகம் வீட்டை சோதனை செய்த போது, சாக்கு பையில் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரது வீட்டில் இருந்து 23 பாக்கெட்டுகளில் இருந்த 4.6 லிட்டர் கள்ள சாராயத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து கற்பகத்தை கைது செய்தனர்.

 

Related posts

காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் மீது வழக்குப்பதிவு: திருவல்லிக்கேணி போலீசார் நடவடிக்கை

லாரி ஓட்டுனரிடம் செல்போன் திருடிய 4 பேர் கைது

மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை விமான நிலையம்