பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் எல்லை தாண்டிய சிறுவன் கைது

புதுடெல்லி: பஞ்சாபில் எல்லைப் பகுதியில் சுற்றித் திரிந்த பாகிஸ்தானின் கசூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனை இந்திய எல்லை பாதுகாப்பு படை கைது செய்தது. இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பஞ்சாப்பின் டார்ன் டார்ன் மாவட்டத்திற்கு உட்பட பல்லோபதி கிராமத்தை ஒட்டிய சர்வதேச எல்லை வேலி அருகே சுற்றித் திரிந்த 16 வயது பாகிஸ்தான் சிறுவனை எல்லைப் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

அந்த சிறுவன் பாகிஸ்தானின் கசூர் பகுதியைச் சேர்ந்தவன் என்றும், அவனிடம் செல்போன் மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் அடங்கிய பொட்டலம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். கைது செய்யப்பட்ட அந்த சிறுவன், கல்ரா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டான். சிறுவன் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து, பாகிஸ்தான் வெளியுறவு துறைக்கும், அந்நாட்டு எல்லை பாதுகாப்பு படைக்கும் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ஒன்றிய அமைச்சர் ஆகிறாரா நிதிஷ்குமார்?.. பீகார் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

கருத்துக் கணிப்புகள் பொய்யாகும்: தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக அமையும்.! காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பேட்டி

கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியருக்கு ஜாமீன்