கொளுத்தும் வெயிலில் குளுகுளு குளியல் டூவீலர் புள்ளிங்கோக்களுக்கு ரூ.4000 ‘பைன்’

தஞ்சாவூர்: கொளுத்தும் வெயிலில் சாலையில் டூவீலரில் குளித்தபடி சென்ற வாலிபருக்கும், அதை வீடியோ எடுத்தவருக்கும் போலீசார் ரூ.4,000 அபராதம் விதித்தனர். சமூகவலைதளங்களில் வரும் வீடியோவை பார்த்து தானும் அப்படி செய்து வீடியோவை பதிவு செய்யும் கலாசாரம் அதிகம் பரவி வருகிறது. குறிப்பாக புள்ளிங்கோக்கள் செய்யும் அட்ராசிட்டிக்கு அளவே இல்லை. தஞ்சாவூரில் வாலிபர் ஒருவர் மொபட்டில் தண்ணீர் வாளியை வைத்துக்கொண்டு குளித்தவாறு செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில் போலீசார் அந்த வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.

இதில் வாகனத்தில் குளித்தவாறு சென்றவர் தஞ்சாவூர் கீழவாசல் குறிச்சி, வடக்கு தெருவை சேர்ந்த அருணாசலம் (23) என்பதும், அதை வீடியோ பதிவு செய்தது அதே பகுதியை சேர்ந்த பிரசன்னா (27) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து இருவருக்கும் தலா ரூ.2,000 அபராதம் விதித்தனர். இது குறித்து தஞ்சாவூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் மேற்கு காவல் நிலைய போலீசார் கூறுகையில், ‘மாநகரில் இதுபோன்ற செயலில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

Related posts

மோடியின் முகத்தில் ஒரு துளி தூசியை பார்த்திருக்கிறீர்களா? இப்படிப்பட்டவருக்கு மக்களின் பிரச்னை குறித்து எப்படித் தெரியும்: பிரியங்கா காந்தி

ரேவண்ணாவுக்கு மருத்துவ பரிசோதனை

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா