கடல் கடந்து காதல் சீனப் பெண்ணை மணந்த கடலூர் வாலிபர்

கடலூர்: கடலூர் மஞ்சக்குப்பம் மேற்கு வேணுகோபாலபுரத்தை சேர்ந்தவர் பாலச்சந்தர். சீனாவுடன் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருக்கும் சீன நாட்டை சேர்ந்த யீஜியோ என்ற பெண்ணுக்கும் சமூக வலைதளம்(வி.சேட்) மூலம் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் கடலூரில் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு குடும்பத்துடன் யீஜியோ, கடலூர் வந்தார். பின்னர் நேற்று கடலூர் முதுநகரில் இவர்கள் திருமணம் நடந்தது. மணமகன் பாலச்சந்தர் தமிழ் கலாசாரத்தின் படி பட்டு வேஷ்டி, சட்டையிலும், சீன மணமகள் யீஜியோ பட்டு சேலை, தங்க அணிகலன்களுடன் இருந்தனர். இருவரும் மணவறையில் அமர யாக குண்டம் அமைத்து மங்கல இசை முழங்க இந்து முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.

Related posts

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு இன்று மாலை அறிவிக்கிறது

கோடை விடுமுறையையொட்டி, கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல்!

ஐபிஎல் டி20-யில் இன்று 2 போட்டி: ராஜஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றிபெற லக்னோ முனைப்பு.! பிற்பகலில் டெல்லி-மும்பை மோதல்