டெல்லி அரசின் அதிகாரத்தை பறிக்கும் அவசரச் சட்டம்!: எதிர்க்கட்சிகளின் ஆதரவை கோரும் அரவிந்த் கெஜ்ரிவால்.. சீதாராம் யெச்சூரியை சந்தித்து பேசினார்..!!

டெல்லி: மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையிலான ஒன்றிய அரசின் அவசர சட்டத்திற்கு நிராகரிக்க ஆதரவு கோரி மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார். தலைநகர் டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தங்களுக்கே உள்ளதாக கூறி வரும் ஒன்றிய அரசு, அதற்கேற்ப அவசர சட்டம் ஒன்றையும் பிறப்பித்தது. இதற்கு எதிராக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக ஆளாத மாநில முதலமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆதரவை கோரி வருகிறார்.

மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை அவர் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த யெச்சூரி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் அவசர சட்டத்தை ஒன்றிய அரசு பிறப்பித்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரத்தில் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு அளிப்பதாகவும், ஒன்றிய அரசின் செயல் அரசியல் அமைப்புக்கு எதிரானது என்றும் யெச்சூரி கண்டனம் தெரிவித்தார். மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் இந்த விவகாரத்தில் காங்கிரசும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று யெச்சூரி கேட்டுக் கொண்டார்.

Related posts

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 5 வயது சிறுமிக்கு பிறவியிலேயே ஒட்டியிருந்த கைவிரல்கள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் பிரிப்பு

செய்யாறு அருகே கார் மீது லாரி மோதி தம்பதி உயிரிழப்பு..!!

தமிழ்நாட்டில் இன்று வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்