சீர்காழி சட்டைநாதர் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்ளச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு

மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்ளச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.

அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, ரவுண்டான பகுதியில் ஆளுநர் ரவி காரில் கடந்தார், அப்போது இந்திய ஜனநாகய வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அறிவழகன், மாவட்ட துணை செயலாளர் குமரேசன் தலைமையில் மயிலாடுதுறை கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் விஜய் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் அவர் காரில் கடந்த பிறகு கறுப்புக்கொடி காட்டி அவருக்கு எதிராக முழக்கமிட்டனர்.

ஆளுநர் ரவி அவர்கள் திரும்ப போக வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர். உடனடியாக அப்பகுதியில் பாதுகாப்புப்பணியில் இருந்த போலீசார் அந்த 5 நபர்களையும் கைது செய்து அழைத்து சென்றனர். மேலும் அவர்கள் வந்த இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்து தற்போது காவல் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

 

Related posts

உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என காங்கிரஸ் அறிவிப்பு

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே இன்று முதல் மின்சார ரயில் இயக்கம்

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது: மே 28 வரை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என கணிப்பு