நடுரோட்டில் 200, 100 நோட்டை சிதறவிட்டு முதியவரின் பைக்கில் இருந்து 2.40 லட்ச ரூபாய் கொள்ளை

அண்ணாநகர்: சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் மணவாளன்(64). இவர் மாநகர் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வுப்பெற்றவர். முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் இருந்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் எடுத்தார். இதன்பின்னர் தனது பைக் சீட்டில் வைத்துக்கொண்டு கிளம்பியபோது வழியில் சிறுநீர கழிப்பதற்காக பைக்கை நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

அப்போது முதியவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த 4 பேர், நடுரோட்டில் 200 மற்றும் 100 ரூபாய் நோட்டை போட்டுவிட்டு அய்யா, ‘’இது உங்க பணமா, கீழே கிடக்கிறது’ என்று கேட்டுள்ளனர். இதையடுத்து அந்த பணத்தை எடுத்தபோது முதியவரின் பைக்கில் இருந்து 2 லட்சத்து 40 ஆயிரத்தை எடுத்து கொண்டு மர்ம நபர்கள் தப்பிவிட்டனர். இதுகுறித்து முதியவர் கொடுத்த புகாரின்படி, நொளம்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related posts

குவைத் தீவிபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

3 நாட்களில் 3 தீவிரவாத தாக்குதல்: 6 ராணுவ வீரர்கள் படுகாயம் ஒரு தீவிரவாதி பலி.! ‘காஷ்மீர் டைகர்’ என்ற அமைப்பு பொறுப்பேற்பு

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் சிறப்பு கல்வி, தசைப்பயிற்சி: பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தல்