அதிகாரிகளை துப்பாக்கி காட்டி மிரட்டிய ஜராத் ஆம் ஆத்மி எம்எல்ஏ போலீசில் சரண்

தேதியாபாடா: வனத்துறை அதிகாரிகளை துப்பாக்கி காட்டி மிரட்டிய குஜராத் ஆம் ஆத்மி எம்எல்ஏ போலீசில் சரணடைந்தார். குஜராத் மாநிலம் தேதியாபாடா தொகுதிக்கு உட்பட்ட வன பகுதியில் தனிநபர்கள் சிலர் விவசாயம் செய்து வந்ததற்கு வனத்துறை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்புக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதால் தொகுதி எம்எல்ஏவான சைத்தர் வசாவா தலையிட்டுள்ளார். கடந்த அக்டோபர் 30ம் தேதி இந்த பிரச்னை பற்றி விவாதிக்க தன்னுடைய வீட்டுக்கு வரும்படி வனத்துறையினருக்கு வசாவா அழைப்பு விடுத்தார்.

அப்போது அங்கு சென்ற அதிகாரிகளை அவர் துப்பாக்கி காட்டி மிரட்டியதோடு, வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டுள்ளார். இது குறித்து எம்எல்ஏ வசாவா, அவரது மனைவி சகுந்தலா, உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.சகுந்தலா, தனி உதவியாளர் ஜிதேந்திரா உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சைத்தர் வசாவா தலைமறைவாகினார். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்த வசாவா நேற்று தேதியாபாடா போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்