ஒடுகத்தூர் அருகே போலீசார் அதிரடி மலையில் 1000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

*அடுப்பு, பேரல்களை அடித்து நொறுக்கினர்

ஒடுகத்தூர் : ஒடுகத்தூர் அருகே மலை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக பிளாஸ்டிக் பேரல்களில் பதுக்கி வைத்திருந்த சுமார் 1000 லிட்டர் சாராய ஊறலை வேப்பங்குப்பம் போலீசார் நேற்று கைப்பற்றி அழித்தனர்.வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட தேக்குமரத்தூர் மலை கிராமத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் நேற்று சாராய தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, சிறு ஓடை பகுதிகளில் சோதனை செய்தபோது அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக பிளாஸ்டிக் பேரல்களில் பதுக்கி வைத்திருந்த சுமார் 1000 லிட்டர் சாராய ஊறல் இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர், அதனை கைப்பற்றிய போலீசார் சாராய ஊறலை கீழே கொட்டி அழித்தனர். மேலும், கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக பயன்படுத்தப்பட்ட அடுப்பு, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாத வகையில் அடித்து நொறுக்கினர்.

மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிந்து காட்டு பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக பிளாஸ்டிக் பேரல்களில் சாராய ஊரலை
பதுக்கி வைத்த அதே பகுதியை சேர்ந்த சக்கரபாணி என்பவரை வலை வீசி தேடி வருகின்றனர். ஒடுகத்தூர் அருகே மலை பகுதியில் நேற்று ஒரே நாளில் சுமார் 1000 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் மொட்டையடித்துக் கொள்வேன் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பார்த்தி

ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்