வடசென்னை அனல் மின்நிலையத்தில் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு


சென்னை: மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தின் முதலாவது நிலையில் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட்டும், 2வது நிலையில் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் என 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதலாவது நிலையில் உள்ள 3வது அலகில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 210 மெகாவாட், 2வது நிலையில் 2வது அலகில் கொதிகலன் குழாயில் கசிவு காரணமாக 600 மெகாவாட் என 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பழுது நீக்கும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

பாலியல் புகார் வழக்கில் தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா கைது

சொல்லிட்டாங்க…

தென்மாவட்டத்தில் தலைகாட்டிய சேலத்துக்காரர் தப்பித்தோம், பிழைத்தோம் என காரில் பறந்த கதையை சொல்கிறார்: wiki யானந்தா