பிளஸ் 2 முடித்தபின் என்ன படிக்கலாம்?.. உடனே டயல் பண்ணுங்க

விருதுநகர், மே 9: 2023-24ம் கல்வியாண்டிற்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், உயர்கல்வி சேர இருக்கும் மாணவர்கள், உயர்கல்வியில் சேர்வதில் தங்களுக்கு எழும் சந்தேகங்களை தீர்ப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கலெக்டர் அலுவலகத்தில் உயர்கல்வி சேர்க்கை ஆலோசனை அலுவலகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வி குறித்து மாணவர்களுக்கு சந்தேகங்கள் இருப்பின் கலெக்டர் அலுவலகத்தில் இதற்கென உள்ள அலுவலகத்தில் நேரில் வந்து விவரங்கள் கேட்டு அறிந்து கொள்ளலாம். தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளலாம். இது தவிர, ஒவ்வொரு ஒன்றியத்திற்கும், ஒவ்வொரு ஆசிரியரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உயர்கல்வி சேர்க்கையில் சந்தேகங்கள், ஆலோசனை உதவிகள் ஆகிய விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

கலெக்டர் அலுவலக அறை கைப்பேசி எண்களான 80729 18467, 75985 10114, 88389 45343, 95970 69842 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம். மேலும் ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் அருப்புக்கோட்டை 87542 71045, காரியாபட்டி 97895 60011, நரிக்குடி 94885 01938, ராஜபாளையம் 97883 96946, சாத்தூர் 70107 62308, சிவகாசி 95002 05414, வில்லிபுத்தூர் 82208 46444, திருச்சுழி 99447 62424, வெம்பக்கோட்டை 94436 69462, விருதுநகர் 94889 88222 ஆகிய ஒன்றிய வாரியாக உள்ள கைப்பேசி எண்களிலும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்