நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயகுமார் மரண வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு

நெல்லை: நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயகுமார் மரண வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். கடந்த 4-ம் தேதி நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயகுமார் தோட்டத்தில் அவரது உடல் பாதி எரிந்த நிலையில் போலீசார் மீட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த வழக்கு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து முக்கிய வழக்காக பார்க்கபட்டு திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. ஜெயகுமார் எழுதியதாக கிடைக்கப்பெற்ற கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கு மேலாக இந்த வழக்கில் எந்தஒரு துப்பும் கிடைக்காததால் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். தற்போது விசாரணை நடத்தி வரும் போலீசார் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கவுள்ளனர்.

Related posts

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து

குமரியில் கடல் அலைகள் சுமார் 10 அடி உயரத்துக்கு எழுவதால் எச்சரிக்கை

கேரள மாநிலம் இன்றும் 2-வது நாளாக நில அதிர்வு