நெல்லையில் பேருந்துகள் சேவை தொடங்கியது; வெள்ளம் வடிந்ததால் சாலைகளில் போக்குவரத்து அனுமதி..!!

நெல்லை: நெல்லையில் பேருந்துகள் சேவை தொடங்கியது. புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பாபநாசம் செல்லும் பேருந்து சேவை தொடங்கியது. சேரன்மகாதேவி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், வழியாக பேருந்துகள் பாபநாசம் செல்லும். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தின் எதிரே உள்ள எஸ்.டி.சி கல்லூரி சாலையில் நீர் முற்றிலுமாக வடிந்ததால் வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வடக்குப் புறவழிச்சாலையில் நீர் வடிந்து வாகனங்கள் செல்லும் வகையில் ஏதுவாக இருந்த போதும் இன்னும் போக்குவரத்துக்கு அனுமதிக்கவில்லை. நெல்லை ஜங்ஷன் செல்லும் பேருந்துகள் வழக்கமான வழிதடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்