திருநெல்வேலி ரயில்வே யார்டு பகுதியில் பாலம் பராமரிப்பு பணி காரணமாக இன்று ரயில் சேவையில் மாற்றம்

திருநெல்வேலி : திருநெல்வேலி ரயில்வே யார்டு பகுதியில் பாலம் பராமரிப்பு பணி காரணமாக இன்று ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நெல்லை – திருச்செந்தூர்(06675), திருச்செந்தூர் – வாஞ்சி மணியாச்சி முன்பதிவில்லா சிறப்பு வண்டி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நாகர்கோயில் – தாம்பரம் அந்தித்யோ சிறப்பு ரயில் விருதுநகரில் இருந்து புறப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதே போல், பாலக்காடு-திருச்செந்தூர் விரைவு ரயில்(16731) இன்று பாலக்காட்டில் இருந்து கோவில்பட்டி வரையே இயக்கப்படும் என்றும் திருச்செந்தூர்-பாலக்காடு விரைவு ரயில்(16732) இன்று திருச்செந்தூருக்கு பதில் கோவில்பட்டியில் இருந்து புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சதுரகிரிக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி

ஜூன் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு