சட்டீஸ்கரில் என்கவுன்டரில் 6 நக்சல்கள் சுட்டுக்கொலை?

சுக்மா: சட்டீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் சுமார் 4 முதல் 6 நக்சல்கள் உயிரிழந்து இருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சட்டீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் உள்ள சோடேகேட்வால் கிராமத்தின் காட்டுப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து பாதுகாப்பு படையினர், மாவட்ட ரிசர்வ் போலீசார் மற்றும் கோப்ரா படைப்பிரிவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது காட்டிற்குள் மறைந்திருந்த நக்சல்கள் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனை தொடர்ந்து வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். சுமார் ஒரு மணி நேரம் வீரர்கள் மற்றும் நக்சல்கள் இடையே துப்பாக்கி சூடு நடந்தது. இதில் சுமார் 4 முதல் 6 நக்சல்கள் காயமடைந்து இருக்கலாம் அல்லது கொல்லப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் இருந்து காயமடைந்தவர்கள் அல்லது இறந்தவர்களின் சடலங்களை சக நக்சல்கள் எடுத்து சென்று பதுங்கி இருக்கலாம் என்று மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பாக உதவி எண்களை அறிவித்துள்ளது ரயில்வே துறை

சென்னை அண்ணா நகரில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு சார் பதிவாளர் தற்கொலை முயற்சி

மன்னார்குடி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு