நேற்று 29 நக்சல்கள் சுட்டுக் கொலை: விரைவில் நக்சல் இல்லாத இந்தியா உருவாகும்.! போலீசுக்கு அமித் ஷா பாராட்டு

புதுடெல்லி: சட்டீஸ்கர் மாநிலம் கன்கர் பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று நடத்திய என்கவுன்டரில் மூத்த நக்சல் தலைவன் சங்கர் ராவ் உட்பட 29 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் இருந்து ஏகே 47, இன்சாஸ் ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. வனப்பகுதியில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர். பாதுகாப்புப் படையினரின் அதிரடி நடவடிக்கையை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘சட்டீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் ஏராளமான நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக்கிய பாதுகாப்புப் படையினருக்கு வாழ்த்துக்கள். காயமடைந்த போலீசார் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். தற்போது நக்சல் இயக்கும் குறிப்பிட்ட பகுதியில் கட்டுப்படுத்தப்பட்டது. விரைவில் நக்சல் இல்லாத இந்தியா உருவாகும்’ என்று ெதரிவித்துள்ளார்.

Related posts

கோயம்பேடு பேருந்து நிலையம் இருந்த இடத்தில் பெரிய பசுமை பூங்கா அமைக்க வேண்டும் : முதலமைச்சருக்கு அன்புமணி கடிதம்

அமோனியா வாயு கசிவு வழக்கில் உரிய அனுமதி பெற்று கோரமண்டல் ஆலையை திறக்க தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

“எப்படி இருந்த நான்” இப்படி ஆயிட்டேன்..! நவீன வசதிகளுடன் புதிய நவீன பிராட்வே பேருந்து நிலைய மாதிரி புகைப்படம் வெளியீடு