நாமக்கல் மாவட்டம் ராசி புரத்தில் சோஃபா தயாரிக்கும் ஆலையில் பயங்கர தீ விபத்து..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசி புரத்தில் சோஃபா தயாரிக்கும் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தனியார் சோஃபா தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த தீ விபத்தின் காரணமாக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சோஃபாக்கள் எரிந்து நாசமாகின. மின்சார இணைப்பு மூலமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல் தெரிகிறது.

தீ ஏற்பட்ட பகுதியில் சேலம் மாவட்டம் தீயணைப்பு துறையும் நாமக்கல் மாவட்ட தீயணைப்பு துறையும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருந்தபோதும் கடுமையான வெயில் காரணமாகவும், காற்று காரணமாகவும் தீயானது மளமளவென பரவி வருகிறது. பல லட்சம் சோஃபா எறிந்த நிலையில் மீதமுள்ள சோஃபாக்கள் எடுக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

விரைவில் பயன்பாட்டுக்கு வரும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்!

கோவையில் காட்டு யானை தாக்கி இளைஞர் காயம்

இந்தியா – இலங்கை பாலம்: ஆய்வு பணி விரைவில் நிறைவு