நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது இல்லை : என்.ஐ.ஏ. தகவல்

சென்னை : நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு எதிராக சட்டத்திற்கு உட்பட்டே நடவடிக்கை எடுப்போம்; கைது நடவடிக்கை இருக்காது என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. நிர்வாகிகள் ஆஜராக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. தகவல் தெரிவித்துள்ளது. துப்பாக்கி தயாரிப்பது பற்றி யூடியூபில் வீடியோ வெளியிட்டதாக நா.த.க.வை சேர்ந்த 2 பட்டதாரிகள் மீது என்ஐஏ வழக்குப் பதிவு செய்துள்ளது. பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கின் அடிப்படையில் நா.த.க. நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. என்.ஐ.ஏ. அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி இளைஞரணி அமைப்பாளர் இடும்பவனம் கார்த்திக் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Related posts

எதிர்பாராத விபத்து வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலத்தில் நடந்துள்ளது: ரயில்வே அமைச்சர் பதிவு

எந்த தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்யப்போகிறார் என்று இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு

செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயார் செய்ய டெண்டர்