நால்கோ நிறுவனத்திற்கு 277 இன்ஜினியர் டிரெய்னீஸ்

ஒடிசா, புவனேஸ்வரிலுள்ள நால்கோ நிறுவனத்தில் 277 இன்ஜினியர் டிரெய்னீஸ் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

i) Chemical: 13 இடங்கள் (பொது-6, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-3, எஸ்டி-1, எஸ்சி-2). இவற்றில் ஓரிடம் மாற்றுத்திறனாளிக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தகுதி: கெமிக்கல் இன்ஜினியரிங்/கெமிக்கல் டெக்னாலஜி பாடப்பிரிவில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) Electrical: 100 இடங்கள் (பொது-40, பொருளாதார பிற்பட்டோர்- 10, ஒபிசி- 27, எஸ்டி-7, எஸ்சி-16) இவற்றில் 5 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தகுதி: எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரிக்கல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன் ஆகிய பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக் தேர்ச்சி.
iii) Instrumentation: 20 இடங்கள் (பொது-9, பொருளாதார பிற்பட்டோர்- 2, ஒபிசி-5, எஸ்டி-1, எஸ்சி-3). இவற்றில் 2 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தகுதி: இன்ஸ்ட்ருமென்டேசன்/ இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் கன்ட்ரோல்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ருமென்டேசன் ஆகிய பாடப்பிரிவுகளில் 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக் தேர்ச்சி.
iv) Mechanical: 127 இடங்கள் (பொது-52, பொருளாதார பிற்பட்டோர்- 13, ஒபிசி-34, எஸ்டி-8, எஸ்சி-20). இவற்றில் 6 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தகுதி: மெக்கானிக்கல் பாடத்தில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
v) Metallurgy: 10 இடங்கள் (பொது-4, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-2, எஸ்டி-1, எஸ்சி-2).
தகுதி: Metallurgy Engineering பாடத்தில் குறைந்தது 60% மதிப்பெண்கள் பெற்று பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
vi) Chemistry: 7 இடங்கள் (பொது-5, ஒபிசி-1, எஸ்சி-1). இவற்றில் ஓரிடம் மாற்றுத்திறனாளிக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தகுதி: குறைந்தது 60% மதிப்பெண்களுடன் எம்.எஸ்சி., பெற்றிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான சம்பளம்: ரூ.40,000-1,40,000. வயது: 2.4.2024 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/ஒபிசி/மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு அளிக்கப்படும்.
கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.500/-. இதர பிரிவினருக்கு ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் கேட்-2023 தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், நேர்முகத்தேர்வில் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

www.nalcoindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 2.4.2024.

 

Related posts

Auto Draft

தமிழ்நாட்டில் ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

மகாராஷ்டிராவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் பலி