நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் விருதுநகரில் இருந்து இன்று புறப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் விருதுநகரில் இருந்து இன்று புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குமரி அருகே வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடியில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. தென்காசி, குமரி, நாகர்கோயில், ராமநாதபுரம்,மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தென் மாவட்டங்களில் கனமழை தொடரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வந்தே பாரத் ரயில் உள்பட பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி – சென்னை எழும்பூர் விரைவு ரயில் இன்று மதுரையில் இருந்து புறப்படுகிறது. நாகர்கோவில் – தாம்பரம் விரைவு ரயில் கோவில்பட்டியில் இருந்து இன்று புறப்படும். நாகர்கோவில் கன்னியாகுமரி, நாகர்கோவில் -நெல்லை, கொச்சுவேலி – கோரக்பூர் சிறப்பு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் – தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் விருதுநகரில் இருந்து இன்று புறப்படும். கொல்லம் – சென்னை எழும்பூர் அனந்தபுரி விரைவு ரயில் கோவில்பட்டியில் இருந்து புறப்படும். கன்னியாகுமரி – புனலூர் விரைவு ரயில் இன்று நாகர்கோவிலில் இருந்து புறப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

Related posts

நீட் மோசடி: பீகாரில் நீட் தேர்வுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பு மாணவர்களிடம் ரூ.32 லட்சம் பெற்று கொண்டு வினாத்தாளை கசியவிட்டதாக தரகர்கள் ஒப்புதல் வாக்குமூலம்

சென்னை திருவொற்றியூரில் எருமை மாடு முட்டியதில் பெண் உள்பட 2 பேர் படுகாயம்

புராதன சின்னங்களை சுற்றி பார்க்க மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்: போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் அவதி