நாகை அருகே நடுக்கடலில் 2 பேர் கொலை: மீனவர்கள் வேலைநிறுத்தம்

நாகை: நடுக்கடலில் மீனவர்கள் 2 பேர் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு பைபர் படகு மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டும் பைபர் படகு மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கீழ்வேளூர், வேதாரண்யத்தைச் சேர்ந்த பைபர் படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 15 கிராம பைபர் படகு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். போராட்டம் காரணமாக கரையோரங்களில் ஆயிரக்கணக்கான பைபர் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது.

Related posts

இறுக்கமான முகத்தோடு சொந்த ஊர் வந்து சேர்ந்த இலைத்தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொல்லிட்டாங்க…

அசாமில் மழையால் 3.5லட்சம் பேர் பாதிப்பு