கர்நாடகாவில் மாயமான சமண துறவி படுகொலை: 2 பேர் கைது

பெலகாவி: கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா ஹிரேகுடி என்ற கிராமத்தில் சமண துறவி ஆச்சார்யா  காமகுமார நந்தி மகாராஜா என்பவர் 15 ஆண்டுகளாக ஆசிரமம் நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் திடீரென அவர் மாயமானார். இந்த வழக்கு தொடர்பாக ஆசிரமத்தில் பணியாற்றி வரும் ஒருவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆசிரம அறக்கட்டளை மூலம் பணம் பெற்றதை சமண துறவி திருப்பி கேட்டதால் ஆத்திரம் அடைந்து வெட்டி கொலை செய்து, கடகபாவி கிராமத்தின் வயலில் வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Related posts

40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்.. வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் இருப்போம்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி!!

சிறார் வாகனம் ஓட்டினால் வாகனத்தின் உரிமம் ரத்து என்ற விதிமுறை தமிழகத்தில் அமல் ஆவதில் தாமதம்

வட மாநிலங்களில் வாட்டிவரும் வெப்ப அலை: உ.பி.யில் 25 தேர்தல் பணியாளர்கள் பலி