கொலை முயற்சி வழக்கில் தலைமறைவான ரவுடி கைது

அண்ணா நகர்: கோயம்பேடு பகுதியில் கொலை முயற்சி வழக்கில் கடந்த 2 வருடமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் சுற்றி வந்த பிரபல ரவுடியை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்து சிறையிலடைத்தனர். சென்னை கொளத்தூர் அன்னை சத்தியா நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி ராகுல் (24). இவர் கடந்த 2018ம் ஆண்டு கொலை முயற்சி வழக்கில் கோயம்பேடு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தொடர்ந்து 2 வருடமாக தலைமறைவாகினார். அவரை கைது செய்யும்படி கோயம்பேடு போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் கோயம்பேடு இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையில் போலீசார், செல்போன் டவர் மூலம் ராகுலை கண்காணித்து வந்தனர். நேற்று செல்போன் டவர் கோயம்பேடு பகுதியை காட்டியது. உடனே போலீசார் விரைந்து சென்று ராகுலை கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர்.

 

Related posts

ஜூன் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு