குரங்குகள் சேதப்படுத்திய பயிர்களை தோட்டக்கலைத்துறை மதிப்பீடு செய்து இழப்பீடு: ஐகோர்ட் கிளை

மதுரை: குரங்குகள் சேதப்படுத்திய பயிர்களை வனத்துறை, தோட்டக்கலைத்துறை மதிப்பீடு செய்து இழப்பீடு வழங்க வேண்டும். முசிறியைச் சேர்ந்த தாயுமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் பப்பாளி, கொய்யா, வாழைகளை குரங்குகள் சேதப்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. குரங்குகள் ஏற்படுத்திய சேதத்தை நீதிமன்றத்தால் கண்டறிய முடியாது வனத்துறை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் கிளை நீதிபதி தெரிவித்துள்ளார்.

Related posts

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா!

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!

ஜூன்- 01: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.