பணமோசடி வழக்கு ஜார்க்கண்ட் அமைச்சரிடம் ஈடி விசாரணை

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஜார்க்கண்ட் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக ஆலம்கீர் ஆலம்(70) பதவி வகித்து வருகிறார். இங்கு கிராமப்புற மேம்பாட்டுத்துறையின் முதன்மை பொறியாளராக பொறுப்பு வகித்து வந்த இளநிலை பொறியாளர் வீரேந்திர குமார். இவர் மீது ஜார்க்கண்ட் மாநில வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்வதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இந்த முறைகேடுகள் குறித்து பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக ஆலம்கீர் ஆலமின் தனி செயலாளர் சஞ்சீவ் குமார் லால்(52), அவரது வீட்டு பணியாளர் ஜஹாங்கீர் ஆலம் ஆகியோரது வீடுகளில் கடந்த வாரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ரூ.32 கோடிக்கும் அதிகமான பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் பலமணி நேரம் விசாரணை நடத்தினர்.

Related posts

ஆரம்பிச்சுட்டாங்கய்யா… ஆரம்பிச்சுட்டாங்க; ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி எம்எல்ஏக்களை இழுக்க பேச்சு: ஆந்திராவில் `ஆபரேஷன் தாமரை’

ரேபரேலியை ராகுல் தக்கவைத்து கொண்டால் வயநாட்டில் பிரியங்கா போட்டி?.. கேரள காங்கிரஸ் விருப்பம்

ஒருபுறம் மோடி பதவியேற்பு விழா..! மறுபுறம் ஜம்மு காஷ்மீரில் பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 10 பேர் உயிரிழப்பு என தகவல்