பிரான்ஸ் தின விழாவில் சிறப்பு விருந்தினராக மோடி பங்கேற்பு

புதுடெல்லி: பிரான்சில் வரும் ஜூலை 14ம் தேதி நடைபெற உள்ள தேசிய தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். வரும் ஜூலை 14ம் தேதி பிரான்ஸ் தேசிய தினம் நடக்கிறது. இந்த ஆண்டு சிறப்பு விருந்தினராக பங்கேற்க அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரன், பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை மோடி ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள மேக்ரன், பாரிஸ் நகரில் நடைபெற உள்ள தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ள மோடியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார். இந்தியா – பிரான்ஸ் இடையேயான உறவின் 25-ம் ஆண்டை முன்னிட்டு, விழா அணிவகுப்பில் இந்திய பாதுகாப்புப் படையும் பங்கேற்க உள்ளது. இதனை அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Related posts

பலாப்பழத்தை பறிக்க மரத்தை முட்டியபோது மின்கம்பி அறுந்து விழுந்து காட்டு யானை பலி

கோடை மழை கொட்டியும் நீர்வரத்து குறைவு; பெரியாறு அணைக்கு வரும் நீரை திசை மாற்றுகிறதா கேரளா?; தமிழக விவசாயிகள் குற்றச்சாட்டு

பிரஜ்வல் ஆபாச வீடியோ விவகாரம்; ரூ.100 கோடி தருவதாக கூறினேனா?: டி.கே.சிவகுமார் ஆவேசம்