மோடியின் பொய்களால் வரலாறுகள் மாறி விடாது: பாஜ விமர்சனத்திற்கு ராகுல் பதிலடி

புதுடெல்லி: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்த பிரதமர் மோடியின் விமர்சனத்திற்கு பதிலடி தந்துள்ள ராகுல் காந்தி, ‘அரசியல் களத்தில் கூறும் பொய்களால் வரலாறு மாறி விடாது’ என கூறி உள்ளார். காங்கிரசின் தேர்தல் அறிக்கை, சுதந்திர போராட்ட காலத்தில் இருந்த முஸ்லிம் லீக் கட்சியின் சித்தாந்தங்களை பிரதிபலிப்பதாக பிரதமர் மோடி மீண்டும் மீண்டும் விமர்சனம் செய்து வருகிறார். இதுதொடர்பாக காங்கிரஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘இந்த தேர்தல் 2 சித்தாந்தங்களுக்கு இடையேயான மோதல். ஒரு பக்கம் இந்தியாவை எப்போதும் ஒன்றிணைக்கும் காங்கிரஸ் உள்ளது. மறுபுறம் எப்போதும் மக்களை பிரிக்க முயற்சிப்பவர்கள் உள்ளனர். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது ஆங்கிலேயர்கள் பக்கம் நின்றது யார்? காங்கிரஸ் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட போது, நாட்டைப் பிளவுபடுத்திய சக்திகளுடன் சேர்ந்து மாநிலங்களில் ஆட்சியை நடத்தியது யார்? எனவே, அரசியல் களத்தில் பொய் பேசுவதன் மூலம் எந்த வரலாறும் மாறிவிடாது. நாட்டை பிளவுபடுத்த நினைத்த சக்திகளுடன் கைகோர்த்து அவர்களை வலுப்படுத்தியவர்கள் யார் என்பதற்கு வரலாறே சாட்சி’’ என கூறி உள்ளார்.

Related posts

3 நாட்களில் 3 தீவிரவாத தாக்குதல்: 6 ராணுவ வீரர்கள் படுகாயம் ஒரு தீவிரவாதி பலி.! ‘காஷ்மீர் டைகர்’ என்ற அமைப்பு பொறுப்பேற்பு

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் சிறப்பு கல்வி, தசைப்பயிற்சி: பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தல்

குவைத் தீ விபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு