மோடியின் லட்சத்தீவு பயண விவகாரம்: இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; மாலத்தீவு மாஜி துணை சபாநாயகர் காட்டம்

கோலாலம்பூர்: பிரதமர் மோடியின் சமீபத்திய லட்சத்தீவு பயணத்தை கேலி செய்து மாலத்தீவு நாட்டின் அமைச்சர்கள் மர்யம் ஷியூனா, மல்ஷா ஷெரீப், அப்துல்லா மஹ்சூம் மஜித் மற்றும் பலர் கருத்து தெரிவித்தனர். அவர்கள் இந்தியாவை குறிவைத்து அவதூறு கருத்துகளை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டது. அவர்களின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து மாலத்தீவு அரசு, மேற்கண்ட மூன்று அமைச்சர்களையும் சஸ்பெண்ட் செய்தது. மேலும் மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துக்கு சர்வதேச அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து மாலத்தீவு எம்பியும், முன்னாள் துணை சபாநாயகருமான இவா அப்துல்லா அளித்த பேட்டியில், ‘இந்திய பிரதமர் மோடிக்கு எதிராக அமைச்சர்கள் வெளியிட்ட சர்ச்சை கருத்துகளை பகிரங்கமாக மாலத்தீவு அரசு எதிர்க்க வேண்டும். அமைச்சர்களின் கருத்து முற்றிலும் அவமானகரமானது. இந்திய பிரதமருக்கு எதிராக நமது அமைச்சர்கள் கூறிய கருத்து வெட்கக்கேடானது. இதுபோன்ற கருத்துகளை அமைச்சர்கள் தவிர்த்திருக்க வேண்டும். மாலத்தீவு அரசு இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அமைச்சர்களின் கருத்து இனவெறி மற்றும் சகிப்புத்தன்மையற்றது’ என்று கூறியுள்ளார்.

Related posts

இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றியை பெறுவதற்கு அடித்தளமாக விளங்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: திமுக