எம்எல்ஏ வேட்பாளராக போட்டியிடும் நிலையில் தெலங்கானா தேர்தல் பிரசாரத்தில் பிஆர்எஸ் எம்பிக்கு கத்திக்குத்து: வாழ்த்து தெரிவிப்பது போல வந்தவர் துணிகரம்

திருமலை: தெலங்கானா மாநிலம், மேடக் பிஆர்எஸ் கட்சி எம்பியும், துப்பாக்க தொகுதி எம்எல்ஏ வேட்பாளருமான கோட்டா பிரபாகர் நேற்று சித்திப்பேட்டை மாவட்டம், தவுலதாபாத் மண்டலம் சூரம்பள்ளி கிராமத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவிப்பது போல வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்தினார். இதில் எம்பி பிரபாகர் வயிற்றில் பலத்த காயங்களுடன் விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கட்சியினர் அவரை மீட்டு கஜ்வெல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செகந்திராபாத் யசோதா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எம்பியை கத்தியால் குத்திய மர்ம நபரை பி.ஆர்.எஸ். கட்சியினர் பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர், காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த கத்தி குத்து சம்பவத்துக்கு உட்கட்சி பூசல் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படும்: வானிலை மையம் எச்சரிக்கை

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு