மிசோரமில் ரூ.68 கோடி போதைப்பொருள் பறிமுதல்

அய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தின் சில மாவட்டங்களில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அசாம் ரைபிள்ஸ் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் கடந்த புதன்கிழமை சியாஹா மாவட்டத்தில் உள்ள புல்புய் என்ற கிராமத்தில் அசாம் ரைபிள்ஸ் படையினர் சோதனை நடத்தினர். அப்போது ரூ.1.75 கோடி மதிப்பிலான 225 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் நேற்று முன்தினம் சம்பை மாவட்டத்தில் உள்ள சோகாவ்தார்-மெல்புக் சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் 20 பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட 22.2 கிலோ எடையுள்ள மெத்தம்பேட்டமைன் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. இதன் மதிப்பு ரூ.66.66 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஈரான் அதிபர் சையத் இப்ராஹிம் ரைசி மறைவுற்கு பிரதமர் மோடி இரங்கல்

வாரத்தின் முதல் நாளிலே ஷாக் கொடுக்கும் தங்கம் விலை.. சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனை: வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சம்..!!

தமிழ்நாட்டில் 14 இடங்களில் கனமழை; ஒரு இடத்தில் மிக கனமழை பதிவாகியுள்ளது