மயாமி ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் அசரெங்கா

மயாமி: அமெரிக்காவில் நடைபெறும் மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, பெலாரஸ் நட்சத்திரம் விக்டோரியா அசரெங்கா தகுதி பெற்றார். காலிறுதியில் கஜகஸ்தானின் யூலியா புடின்ட்சேவாவுடன் (29 வயது, 68வது ரேங்க்) மோதிய அசரெங்கா (34 வயது, 32வது ரேங்க்), டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த முதல் செட்டை 7-6 (7-4) என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டில் அதிரடியாக விளையாடி அசரெங்காவின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த யூலியா 6-1 என எளிதாக வென்று பதிலடி கொடுக்க, சமநிலை ஏற்பட்டது. எனினும், 3வது மற்றும் கடைசி செட்டில் சிறப்பாக விளையாடிய அசரெங்கா 7-6 (7-4), 1-6, 6-3 என்ற செட் கணக்கில் 2 மணி, 55 நிமிடம் போராடி வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் கஜகஸ்தானின் எலனா ரைபாகினா (24 வயது, 4வது ரேங்க்) 7-5, 6-7 (4-7), 6-4 என்ற செட் கணக்கில் கிரீஸ் வீராங்கனை மரியா சாக்கரியை (28 வயது, 9வது ரேங்க்) வீழ்த்தினார். இப்போட்டி 2 மணி, 48 நிமிடத்துக்கு நீடித்தது. அரையிறுதியில் ரைபாகினா – அசரெங்கா மோதுகின்றனர்.

Related posts

விமான நிறுவன ஊழியர்கள் போராட்டத்தால் 8 விமானங்கள் ரத்து; 25 ஊழியர்கள் பணிநீக்கம்.! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அதிரடி

தென் சென்னை மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 2 கண்காணிப்பு கேமராக்கள் பழுது

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு