15 லட்சத்திற்கு பட்டுக்கூடு ஏலம்

தர்மபுரி, மார்ச் 28: தர்மபுரி மாவட்ட பட்டு கூடு அங்காடியில், தினமும் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் வெண்பட்டுக்கூடுகளை ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர். பட்டுக்கூடுக்கு நல்ல விலை கிடைப்பதால், தர்மபுரி மட்டுமின்றி பிற மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும் பட்டுக்கூடுகளை, தர்மபுரி பட்டுக்கூடு அங்காடிக்கு கொண்டு வருகின்றனர். கடந்த 25ம் தேதி 52 விவசாயிகள் 3,432 கிலோ பட்டுக்கூடுகளையும், 26ம் தேதி 52 விவசாயிகள் 3,689 கிலோ பட்டுக்கூடுகளையும் கொண்டு வந்திருந்தனர்.

இந்நிலையில், 3வது நாளாக நேற்று, 59 விவசாயிகள் மட்டும் 3,872 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கடந்த 3 நாட்களாக தினமும் அதிக அளவிலான விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டு வந்து ஏலத்தில் கலந்து கொள்கின்றனர். நேற்று தர்மபுரி பட்டுக்கூடு அங்காடியில், வெண் பட்டுக்கூடு அதிகபட்சமாக ₹500க்கும், சரசாரியாக ₹397க்கும், குறைந்தபட்சமாக ₹273க்கும் ஏலம் போனது. மொத்தம் ₹15 லட்சத்து 40ஆயிரத்து 438க்கு ஏல பரிவர்த்தனை நடந்தது.

Related posts

மேட்டமலை கிராமத்தில் தண்ணீர் கசியும் புதிய வாட்டர்டேங்க் சீரமைக்க மக்கள் கோரிக்கை

வடமாடு மஞ்சுவிரட்டில் விவசாயி மண்டை உடைப்பு

வத்திராயிருப்பில் நெல் கொள்முதல் நிலையம் நான்கு இடங்களில் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி