மேட்டுப்பாளையத்தில் பாகுபலி யானை தோட்டத்திற்குள் புகுந்தது பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலை..!!

கோவை: மேட்டுப்பாளையத்தில் பாகுபலி யானை தோட்டத்திற்குள் புகுந்தது பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேட்டுப்பாளையம் பகுதியில் புதர் காடுகள் அதிகமுள்ள வனப்பகுதி காணப்படுகிறது. கோடை வெப்பத்தின் தாக்கம், வறட்சி காரணமாக வனவிலங்குகளுக்கு தேவையான உணவுகள் குறைந்திருப்பதால் கடந்த சில ஆண்டுகளாக பாகுபலி யானை நடமாடி வருகிறது. குறிப்பாக நெல்லிமலை மற்றும் கல்லார் வனப்பகுதியின் இடையே பாகுபலி யானை நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

இப்பகுதியில் உள்ள இரு காடுகளுக்கும் யானை இடம்பெயரும் போது பல குடியிருப்புகள் மத்தியில் பொதுமக்களுக்கு எந்த இடையூறும், அச்சுறுத்தல் செய்ததில்லை. ஆனால் தற்போது வறட்சியின் காரணமாக உணவு தேடி விவசாய நிலங்களுக்குள் கடந்த சில நாட்களாக வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களுக்குள் அதிக அளவில் புகுந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்றைய தினம் பாகுபலி யானையானது விவசாய நிலத்திற்குள் புகுந்த தகவல் அறிந்து சென்ற வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

யானையானது மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல் நின்று கொண்டிருந்த காரணத்தினால் யானையின் மீது பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. குறிப்பாக பட்டாசு யானையின் மீது படாதவாறு வனத்துறையினர் வீசி யானையை விரட்டி அடித்தனர். இன்று அதிகாலையில் நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து குடியிருப்புகள் வழியாக கல்லாறு வனப்பகுதிக்கு சென்றது. இதையும் வனத்துறையினர் கண்காணித்து கல்லாறு வனப்பகுதிக்கு சென்று விட்டதா என்றும் கண்காணித்து வருகின்றனர்.

Related posts

சொன்னதை செய்வோம்- செய்ததை சொல்வோம்’ என்பது கலைஞரின் கொள்கை முழக்கம்; சொல்லியதை மட்டுமல்ல – சொல்லாததையும் செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்: சிறப்பான திட்டங்களால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாக வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

செல்போன் பறிப்பை தடுத்த வடமாநில வாலிபர் கொலை: திருப்பூரில் தொழிலாளர்கள் போராட்டம்