மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும்: ஒன்றிய அரசு அனுமதி அளிக்க கூடாது.! விஜயகாந்த் அறிக்கை

சென்னை: மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்திற்கு ஒன்றிய அரசும் அனுமதி அளிக்க கூடாது என விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், காவிரி ஆற்றில் மேகதாது அணை கட்டுவது உறுதி என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அரசியல் பிரபலங்கள் கணடனம் தெரிவித்து வரும் நிலையில்,கேப்டன் விஜயகாந்த் அவர்களும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கர்நாடக மாநில துணை முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான டிகே சிவக்குமார், மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என கூறியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

மேகதாதுவில் அணை கட்ட முந்தைய பாஜக அரசு தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது புதிதாக பதவியேற்றிருக்கும் காங்கிரஸ் கட்சியும் மேகதாது விவகாரத்தை கையில் எடுத்திருப்பது தமிழக விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் மாறி மாறி ஆட்சி செய்து வரும் பாஜகவும் காங்கிரசும், காவிரியின் குறுக்கே பல்வேறு அணைகளைக் கட்டி, தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடித்து வருகின்றன. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும். இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் முழு கவனம் செலுத்தி, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்தை முற்றிலுமாக கைவிட கர்நாடக காங்கிரஸ் கட்சியிடம் வலியுறுத்த வேண்டும். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்திற்கு மத்திய அரசும் அனுமதி அளிக்க கூடாது.’ என தெரிவித்துள்ளார்.

Related posts

வீட்டுச் செய்முறையில் சென்னை மக்கள் விரும்பும் பாஸ்மதி பிரியாணி…

உணவுகளைப் பதப்படுத்த இவ்ளோ யுக்தி இருக்கு!

ஹோம் பேக்கர் டூ கஃபே ஓனர்!