மறைமலைநகர் சுற்றுவட்டார பகுதியில் விலை உயர்ந்த பைக்குகள் திருடிய 5 பேருக்கு சிறை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடி வருவதாக மறைமலைநகர் காவல்நிலையத்தில் பல்வேறு புகார் கொடுக்கப்பட்டது. புகாரின்பேரில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடிவந்தனர்.

நேற்று முன்தினம் மறைமலைநகர் பகுதியில் மது அருந்திக்கொண்டிருந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளனர். காவல்நிலையம் அழைத்து சென்று முறையாக விசாரித்தபோது, இருசக்கர வாகனங்களை திருடியதை ஒப்புகொண்டனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சதீஷ்குமார், சஞ்சய் என்பதுதெரியவந்தது. இவர்கள் கொடுத்த தகவல்படி அதே பகுதியில் பதுங்கியிருந்த அகில், பிரவீன், அப்துல் ரகுமான் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான 5 பேர் மீதும் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் காவல்நிலையங்களில் நிலுவையில் இருப்பதும், பைக்குகளை குறித்து வைத்து திருடி வந்ததும் தெரிய வந்துள்ளது. இவர்களிடம் இருந்து 2 பைக்குள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கைது செய்யப் பட்ட 5 பேரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை!

உதகையில் 126-வது மலர் கண்காட்சி மே 10-ம் தேதி தொடங்கி மே 20-ம் தேதி வரை நடைபெறும்: நீலகிரி ஆட்சியர்

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு எதிரொலி; போக்குவரத்தை சீரமைக்க 200 போலீசார் நியமனம்